ஒலிம்பிக்: 9-வது இடத்தில் தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ரேங்கிங் சுற்று நடைபெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை உள்பட 64 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர்.
இதில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தை பிடித்தார்.