ஒலிம்பிக்: 17 வயது தென்கொரிய வீரர் சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை பிரிவில் 17 வயது தென்கொரிய வீரர் சாதனை படைத்துள்ளார்.

இதில் 17 வயதான தென் கொரியாவை சேர்ந்த கிம் ஜே தியோக் புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் அமெரிக்கா வைச் சேர்ந்த எல்லிசன் பிரடி 682 புள்ளிகளுடன் உள்ளார். தென் கொரியாவை சேர்ந்த ஓஹ் ஜின்க்யெக் 681 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், கிம் வோஜின் 681 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளார்.

இந்திய ஆண்கள் வீரர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த போராடுகிறார்கள். பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகளுடன் 31 வது இடத்தில் உள்ளார். 653 புள்ளிகளுடன் 35 வது இடத்தில் அதானு தாஸ் உள்ளார். 652 புள்ளிகளுடன் 37 வது இடத்தில் தருந்தீப் ராய் உள்ளார்.
கலப்பு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 663 புள்ளிகளுடனும் பிரவீன் ஜாதவ் 656 புள்ளிகளுடனும் மொத்தம் 1319 புள்ளிகளுடன் 29 அணிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.