ஒலிம்பிக்: தன்னார்வலருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி அங்கு கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்த பணிகளை கவனிக்கும் தன்னார்வ தொண்டர்கள் குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியபட்டுள்ளது.

போட்டிக்காக பணியாற்றும் தன்னார்வ குழுவை சேர்ந்த ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில் கொரோனாவால் பாதித்த ஒலிம்பிக் போட்டி தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து இருக்கிறது.