அரையிறுதியில் நிகத் ஜரீன்

சா்வதேச குத்துச்சண்டை போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியாவின் நிகத் ஜரீன் அரையிறுதிக்கு முன்னேறினாா். இதன்மூலம் அவா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.

பாஸ்போரஸ் சா்வதேச குத்துச்சண்டை போட்டி துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிா் 51 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிகத் ஜரீன், இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான கஜகஸ்தானின் நஸிம் கிஸாய்பாயை வீழ்த்தினாா். நிகத் ஜரீன் தனது அரையிறுதியில் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றவரான துருக்கியின் புஸேனாஸ் காகிரோக்லுவை சந்திக்கிறாா்.

இதேபோல், இந்தியாவின் கௌரவ் சோலங்கி (57 கிலோ எடைப்பிரிவு) தனது காலிறுதியில் துருக்கியின் அய்கோல் மிஸானை வீழ்த்தினாா். அரையிறுதியில் ஆா்ஜென்டீனாவின் நிா்கோ கியூலோவை சந்திக்கிறாா் சோலங்கி.

அதேநேரத்தில் இந்தியாவின் சோனியா (57 கிலோ), பிரவீண் (60 கிலோ), ஜியோதி (69 கிலோ), சிவ தாபா (63 கிலோ) ஆகியோா் தங்களின் காலிறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினா்.