முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து.!

ஒவ்வொரு ஆண்டும் மே மாத தொடக்கத்தில் ,ஐ.சி.சி சார்பில் கடைசி 3 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் , அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வந்தது. அதுபோல இந்த ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அதில் ஒருநாள் போட்டித் தொடரின் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி 121 புள்ளிகள் எடுத்து ,3வது இடத்தில் இருந்து முதல் இடத்தையும் , 118 புள்ளிகள் எடுத்து ,ஆஸ்திரேலிய அணி 2 வது இடத்தையும் பெற்றுள்ளது . 115 புள்ளிகள் எடுத்து இந்தியா 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதற்கு அடுத்து 115 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4வது இடத்தையும் ,தென்ஆப்பிரிக்கா 107 புள்ளிகளை எடுத்து ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. அதுபோல 20 ஓவர் போட்டி தரவரிசை பட்டியலில் 277 புள்ளிகளை எடுத்து ,இங்கிலாந்து அணி முதலிடத்தை பெற்றுள்ளது. அடுத்ததாக 272 புள்ளிகளை எடுத்து இந்தியா 2வது இடத்தையும், 263 புள்ளிகள் எடுத்து நியூசிலாந்து 3வது இடத்தையும் பெற்றுள்ளது. அடுத்ததாக 261 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 4வது இடத்தையும் , 258 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 5வது இடத்தையும் பெற்றுள்ளது.