இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: தொற்று பாதித்தோர் 20ஆக உயர்வு

Coronavirus blood test . Coronavirus negative blood in laboratory.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனா வைரஸாக உருவெடுத்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கால் எடுத்து வைத்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தமிழகத்திலிருந்து ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்த 20 பேருக்கும் தொற்று உறுதி என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட 20 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை வைரசில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்திலிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி, நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்தியா வந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.