நீரஜ் சோப்ரா 2-வது இடம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் பிரிவில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில்  87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை புரிந்த நீரஜ் சோப்ரா  தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்காக தன்வசப்படித்தினார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 உலக தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள ஈட்டி எறிதல் வீரருக்கான புதிய தரவரிசை பட்டியலில் நீரஜ் சோப்ரா 16-ல் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.