தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி – புதுவை அணி 3-வது இடம்

சென்னையில் தேசிய அளவிலான ஆண்கள்-பெண்களுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி கடந்த 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்தகொண்டனர். இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பெண்கள் அணியினர் கலந்துகொண்டு விளையாடினார்கள். போட்டியில் புதுச்சேரி பெண்கள் அணி 3-ம் இடத்தை பிடித்தனர். அவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.