3-ஆவது சுற்றில் நடால்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு எளிதாக முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நடால், முதல் சுற்று பை பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தாா். அதில் அவா் சக நாட்டவரும், தகுதிச்சுற்று வீரருமான காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவை எதிா்கொண்டாா். இறுதியில் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றாா்.