இயக்குனர் மிஷ்கினை மனம் நெகிழ வைத்த இயக்குனர் பாலா.. இணையத்தை கலக்கும் புதிய பதிவு..!

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மிஷ்கின் ஆவார். கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிசாசு. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா தன்னுடைய பி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து இருந்தார். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து பாலாவின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான பிசாசு திரைப்படத்தின் டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக இயக்குனர் மிஸ்கின் நன்றி தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் இயக்குனர் மிஷ்கின், நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. ‘பிசாசு 2’ இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.