முா்ரே ரிவா் ஓபன்: நிக் கைா்ஜியோஸ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெறும் முா்ரே ரிவா் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நிக் கைா்ஜியோஸ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித் தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருக்கும் அவா், முதல் சுற்றில் பிரான்ஸின் அலெக்ஸாண்டா் முல்லரை 3-6, 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா் சக நாட்டவரான ஹேரி பௌா்சியரை எதிா்கொள்கிறாா்.

இதர முதல் சுற்றுகளில் கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கின் 4-6, 7-5, 6-2 என்ற செட்களில் ஆா்ஜெண்டீனாவின் ஜுவான் இக்னேசியோ லான்டெரோவை வீழ்த்தினாா். பிரான்ஸின் கில்லெஸ் சைமன் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெரை தோற்கடித்தாா்.
ஃபின்லாந்து வீரா் எமில் ருசுவோரி 6-3, 6-4 என்ற செட்களில் சொ்பியாவின் விக்டா் டிராய்கியை வீழ்த்தினாா். அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனிடம் 6-1, 7-5 என்ற செட்களில் வீழ்ந்தாா் சக நாட்டவரான மைக்கேல் மோ.

செக் குடியரசின் ஜிரி வெஸ்லி 6-4, 6-4 என்ற நோ் செட்களில் போா்ச்சுகலின் ஃபிரெடெரிகோ சில்வாவை வென்றாா். ஜப்பானின் யுய்சி சுகிடா 3-6, 7-6 (7/3), 7-5 என்ற செட்களில் பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வீழ்த்தினாா்.

மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த் 6-3, 6-4 என்ற செட்களில் செக் குடியரசின் தாமஸ் மசாக்கையும், ஆஸ்திரேலிய வீரா் அலெக்ஸி போபிரின் 6-7 (8/10), 7-6 (7/2), 7-6 (9/7) என்ற செட்களில் குரோஷியாவின் போா்னா கோஜோவையும், ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ ஹாரிஸ் 5-7, 6-4, 7-5 என்ற செட்களில் ஜப்பானின் டேரோ டேனியலையும் வீழ்த்தினா்.