எஸ்பிபி க்கு விரைவில் நினைவில்லம் கட்டப்படும்- எஸ் பி பி சரண் அறிவிப்பு!

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு நினைவில்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ் பி பி சரண் கூறியுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளியன்று பிற்பகல் 1.04 மணி அளவில் காலமானார். எஸ்பிபி அவர்களின் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை வலைதள பக்கங்களில் மூலமாக தெரிவித்திருந்தனர். அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில் நேற்று நண்பகல் எஸ் பி பி யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் எஸ் பி பி யின் மகன் எஸ்பிபி சரண் , தனது தந்தைக்கு நினைவு இல்லம் அமைக்கப்படும் என்றும் ஒரு வாரத்திற்குள் அதற்குண்டான தகவல்கள் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் அவர் நன்றி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.