4வது டெஸ்ட் சதமடித்தார் மயங்க் அகர்வால்

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது. மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டி தாமதகமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 44 ரன்கள் எடுத்திருந்தபோது சுப்மன் கில், அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் குடுத்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா , அஜாஸ் பட்டேல் வீசிய 29.2 ஓவரில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி அதே ஓவரில் கடைசி பந்தில் ரன் எடுக்காமல் வெளியேறினார். இந்த நிலையில் முதல் நாள் போட்டியின் கடைசி செசனில் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 196 பந்தில் தனது 4 வது டெஸ்ட் சதத்தை அடித்தார். முதல் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட் வீழ்த்தி உள்ளார் .