சின்னத்திரை சங்கத்தின் தலைவரானார் மனோபாலா..!

பெரிய திரைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பதைப் போலவே சின்னத்திரைக்கும் தனியாக நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சின்னத்திரை சங்கத்தின் உடைய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் அவசர அவசரமாக நடைபெற்றது. இந்த குழுவில் நடைபெற்ற ஆலோசனை முடிவில் நடிகர் மனோபாலா சின்னத்திரை சங்கத்தின் தலைவராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் மனோபாலா, தன்னை சின்னத்திரை சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக சிரம் தாழ்ந்து நன்றி கூறுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சின்ன துணைக்காக எப்பொழுதும் தான் அழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். சின்னத்திரை சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோபாலா அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.