ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற மணிகா, சத்யன், சுதிர்தா

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களான சத்யன் ஞானசேகரன், சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா ஆகியோர் தகுதி பெற்றனர்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனையான சுதிர்தா முதல் நிலை வீராங்கனையான மணிகா பத்ராவை எதிர்கொண்டு 4-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மேலும், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா, அதிக அளவிலான புள்ளிகளைப் பெற்றிருந்ததால், அவரும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்தார்.

இதேபோன்று, இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியடைந்துள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார்.