3 பதக்கங்களை வென்று மதுரை மாணவி சாதனை

மதுரை கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் அரியநாயகம். இவர் மதுரை மாநகர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் தேஜெஸ்வினி. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், ரோலர் ஸ்கேட்டிங் பெடரேசன் ஆஃப் இந்தியா நடத்திய 58வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சேம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டார்.

இந்த போட்டிகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடைபெற்றது. மதுரையில் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவி தேஜெஸ்வினி 1500, 1000, மற்றும் 500 மீட்டர் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த மூன்று போட்டிகளும் நான்கு சுற்றுகளாக நடைபெற்றது இதில்1500 மீட்டர் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் .1000 மற்றும் 500 மீட்டர் போட்டிகளில் தலா 1 வெண்கல பதக்கமும் வென்று மொத்தம் மூன்று பதக்கங்களை வென்று சாதனை புரிந்து தமிழகத்திற்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பது எனது லட்சியம் என்று தேஜெஸ்வினி தெரிவித்தார்.