5 விக்கெட் எடுத்த லுங்கி கிடி – ஒரே நாளில் 14 விக்கெட்டுகள் காலி

தென்னாப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் நாளிலேயே மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதுவும் வெறும் 97 ரன்களுக்கு. தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 20 ரன்கள் அடித்தார். கிரெய்க் பிராத்வைட் மற்றும் ஷாய் ஹோப் தலா 15 ரன்கள் அடித்தனர்.

தென்னாப்பிரிக்க அணியின் லுங்கி கிடி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். டெஸ்ட் தொட்ரில் 2 ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் லுங்கி கிடி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை அடித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஐடன் மர்கரம் 60 ரன்கள் அடித்தார்.

தென்னாப்பிரிக்க அணி 31 ரன்கள் முன்னிலையில் உள்ளது.