கர்ட்லி ஆம்ப்ரோஸ் புகழாரம்..!

‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நான் மிக தீவிரமான ரசிகன். அவரது ஆட்டத்தை உலகில் எந்த ஒரு மைதானத்திலும் நேரில் சென்று பணம் கொடுத்து பார்க்கும் அளவிற்கு நான் ரசிகன். அந்த அளவிற்கு கோலியின் ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நேர்த்தியாக ஆடுகிறார். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்’ என கர்ட்லி ஆம்ப்ரோஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பல சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்தது.