ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: முதல் ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கும் இந்தியா!

ice hockey player silhouette on grunge background

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 24ம் தேதி பிரான்ஸை சந்திக்கிறது. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாளின் இதர ஆட்டங்களில் பெல்ஜியம் – தென் ஆப்பிரிக்கா, மலேசியா – சிலி, ஜெர்மனி – பாகிஸ்தான், கனடா – போலந்து அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை போட்டிக்கான குரூப் பிரிவுகளை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் புதன்கிழமை அறிவித்தது. அதில் இந்தியா, குரூப் “பி’-இல் கனடா, பிரான்ஸ், போலந்து அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கும் இந்தியா, அடுத்து கனடாவை 25ம் தேதியும், போலந்தை 27ம் தேதியும் எதிர்கொள்கிறது. இப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் டிசம்பர் 3, இறுதி ஆட்டம் டிசம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.