18-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று அசத்தும் வீராங்கனை ஜூலியா லேபல் அரியாஸ்…!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வயதான வீராங்கனை என்ற பெருமையை மொனாக்கோ பெண்கள் அணிக்காக விளையாடும் 77 வயது ஜூலியா லேபல் அரியாஸ் பெற்றுள்ளார். அர்ஜென்டினாவில் பிறந்தவரான ஜூலியா முதலில் தனது சொந்த நாட்டுக்காக ஆடினார். அதன் பிறகு பிரான்ஸ் அணிக்காக ஆடிய அவர் தற்போது மொனாக்கோ அணிக்காக கால்பதித்துள்ளார். செஸ் விளையாட்டில் ஜொலிக்க வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கலக்கும் ஜூலியா நேற்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் மடகாஸ்கர் அணி வீராங்கனை ராகோடோனியைன் டியானா ஜோஹன்னாவை 41-வது காய்நகர்த்தலில் வீழ்த்தினார். மடகாஸ்கர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மொனாக்கோ 4-0 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஜூலியா ஆடும் 18-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.