அலங்காநல்லூரில் 16ந்தேதி ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் உலக புகழ் பெற்றுள்ளது.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளை வளர்ப்போர் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு திடலில் காளைகள் நின்று விளையாடும். இந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்களும் பயிற்சியை தொடங்கி விட்டனர்.

அலங்காநல்லூரைபோல அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் பொங்கல் திருநாளான ஜனவரி 14-ந் தேதி (வியாழக்கிழமை) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குறைந்தபட்சம் 300 மாடுபிடி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவும், அவர்கள் சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை களம் இறங்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பணிகள் வேகம் பிடித்துள்ளன.