ஐ.எஸ்.எல். கால்பந்து : ஐதராபாத் அணி 2-வது வெற்றி

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது. ஐதராபாத் அணியில் அரிடேன் சந்தனா (2 கோல்), ஹாலிசரன் நார்ஜாரி கோல் அடித்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 3 ஆட்டங்களில் டிரா கண்டுள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-எப்.சி.கோவா (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.