ஐஎஸ்எல் கால்பந்து: 9வது வெற்றியுடன் தொடர்ந்து முதலிடம்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 67வது ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

கோவாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மும்பை அணி 27வது நிமிடத்தில் கோலடித்தது. இந்த கோல், வெற்றி கோலாக அமைந்தது. இதன்மூலம், மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.</p>
இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை, 9வது வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை அணி 29 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.