பி.வி.சிந்து ஓய்வு பெறுகிறாரா.?

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது ரசிகர்களுக்கு திடீர் என ஒரு அதிர்ச்சியை கொடுத்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக, டென்மார்க் ஓபனில் பங்கேற்க முடியாமல் போனது ’கடைசித் துரும்பு’ என்று கூறி இருந்தார். ‘நான் ஓய்வு பெறுகிறேன்’ என்று ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார்.

இதனால், அவர் ஓய்வு பெறப்போவதாகக் கூறப்பட்டது

இந்நிலையில், கவனத்தை ஈர்ப்பதற்காகவே ஓய்வு என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். கண்ணுக்குத் தெரியாத கொரோனா அச்சத்தை ஒதுக்கி வைக்க முடிவு செய்திருக்கிறேன். கொரோனா அச்சத்தில் இருந்து மட்டுமே விலகுவதாக தெரிவித்திருந்தேன்’ என பி.வி.சிந்து அறிவித்துள்ளார்.