7-ம் தேதிமுதல், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை : தமிழக அரசு

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே, பேருந்து சேவை செயல்பட முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தற்போது, மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

* தமிழகத்திற்குள் செப்டம்பர் 7-ம் தேதிமுதல், பயணிகள் ரெயில் சேவை செயல்பட அனுமதி.

* செப்டம்பர் 7-ம் தேதிமுதல், மாவட்டங்களுக்கு இடையேயான அரசு – தனியார் போக்குவரத்திற்கு அனுமதி

*  தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து சேவை செப்டம்பர் 7- ம்தேதிமுதல் இயக்கப்படும்.

ஏற்கனவே மாவட்டங்களுக்குள் அரசு பேருந்து சேவை நேற்று தொடங்கிய நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.