10, 12-ம் வகுப்பு வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்

கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்கள் கழித்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வழியாக படித்து வந்த மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைக்கப்பட்டன.

பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற விரும்புவோர் குறைந்தபட்ச பாடத் திட்டத்தையும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்புவோர் ஏற்கனவே இருக்கும் பாடத் திட்டப்படி புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.