ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கைப்பந்து அணி அறிவிப்பு

ஆசிய கைப்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான ஆண்கள் கைப்பந்து போட்டி தாய்லாந்தில் உள்ள நகோன் பதோம் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியை, இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் அனில் சவுத்ரி அறிவித்துள்ளார். இந்திய அணி வருமாறு:- துஷ்யந்த் சிங் (கேப்டன்), ஜோஷ்நூர் தின்ட்சா, சந்தீப், அஜய்குமார், சமீர் சவுத்ரி, தனிஷ் சவுத்ரி, ஹர்ஷித் கிரி, அமன் குமார், ஜிபின் ஜோப், சச்சின் தாகர், மன்னாத் சவுத்ரி, அஜீத் ஷேகோ, கார்த்திகேயன், சூர்யபிரகாஷ் பன்ஜரா, தலைமை பயிற்சியாளர்: ஜி.இ.ஸ்ரீதரன், உதவி பயிற்சியாளர்கள்: ராஜேஷ் குமார், பிரவீன் ஷர்மா, மானேஜர்: குல்திப் ராஜ் மகோத்ரா.