ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். தீபக் புனியா நைஜீரியா வீரர் எகிரிகெரினியை 12-1 என்று ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். 86கிலோ எடைப்பிரிவு காலிறுதிக்கு இவர் தகுதி பெற்றது டெக்னிக்கல் சுப்பீரியாரிட்டி அடிப்படையில். அதேபோல் ரவிகுமார் தாகியாவும் கொலம்பிய வீரர் டைகரஸ் அர்பேனோவை 13-2 என்று வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார், ஆனால் அன்ஷு மாலிக் தோல்வியுற்றார். ஆனால் அன்ஷு மாலிக்கிக்கிற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.