உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம்

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 18-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நவம்பர் 18-ந் தேதியும், 2-வது போட்டி மவுன்ட் மாங்கானுவில் 20-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நேப்பியரில் 22-ந் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் 25-ந் தேதியும், 2-வது போட்டி ஹாமில்டனில் 27-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 30-ந் தேதியும் நடக்கிறது.