இந்தியா- இலங்கை மேட்ச், எப்ப தெரியுமா.?

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த தொடர் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இரு நாட்டு அரசாங்கத்தின் அனுமதியை பொறுத்தே, போட்டி நடப்பது உறுதியாகும். அனேகமாக ஆகஸ்டு மாதம் இந்திய அணி, இலங்கைக்கு சென்று விளையாட வாய்ப்புள்ளது.