கால்இறுதியில் இந்தியா

ice hockey player silhouette on grunge background

ஒடிசாவில் நடைபெற்று வரும் 12வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜெர்மனி 11-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை பதம் பார்த்தது. கால்இறுதி ஆட்டங்களில் ஜெர்மனி- ஸ்பெயின், நெதர்லாந்து-அர்ஜென்டினா, பிரான்ஸ்-மலேசியா, நடப்பு சாம்பியன் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.