இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இன்று மோதல்

Close-up photo of a cricket ball hitting the stumps and knocking off the bails.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து அணியை இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் சந்தித்த இந்தியா, அந்த டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது. ஆனாலும், இங்கிலாந்து மண்ணில் அந்த அணியை இதுவரை 18 தொடா்களில் சந்தித்து அதில் 3ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எனவே, சொந்த மண்ணில் வெற்றி கண்ட உத்வேகத்துடன், இந்தத் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்போடு இந்தியா களம் காணும். மறுபுறும், சொந்த மண்ணில் இந்தியா தன்னை வீழ்த்தியதற்கு பதிலடி தரும் விதமாக, இந்தத் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து இருக்கிறது.