இந்தியா – ஆஸி. இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும் – ஆஸி. கிரிக்கெட் விளக்கம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்த நிலையில் இந்தியா – ஆஸி. இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி சிட்னியில் நடைபெறும் என்று ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியான நிலையில் ஆஸி. கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.