தளபதி 65 படத்தில், விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜயின் தளபதி 65 திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவரது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வசூலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்த நிலையில், அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி 65. இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் டிலிப்குமார் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் 80 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், தற்போது தளபதி 65 படத்திற்காக 100 கோடி ரூபாய் விஜய் சம்பளம் வாங்கி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். இது தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.