ஜானிக் சின்னெரை வீழ்த்தி ஹியூபெர்ட் ‘சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 37-வது இடம் வகித்த போலந்து வீரர் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ், 19 வயது ஜானிக் சின்னெரை (இத்தாலி) சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் 7-6 (7-4), 6-4 என்ற நேர்செட்டில் ஜானிக் சின்னெரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ்க்கு ரூ.2.20 கோடி பரிசும், ஆயிரம் தரவரிசை புள்ளியும் கிடைத்தது. தோல்வி அடைந்த ஜானிக் சின்னெருக்கு ரூ.1.20 கோடி பரிசுடன், 600 தரவரிசை புள்ளியும் கிட்டியது. 24 வயதான ஹியூபெர்ட் இந்த வெற்றியின் மூலம் 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் பட்டத்தை ருசித்த முதல் போலந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த ஆண்டில் அவர் கைப்பற்றிய 2-வது பட்டம் இதுவாகும்.

hubert-defeated-janick-sinner-to-win-the-title