உடல்சூடால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுங்கள்

பாதாம் பிசினை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால், முழுவதும் கரைந்து கண்ணாடி போல நீர்மம் கிடைக்கும். இதனை நம் விருப்பப்படி உணவுகளில் கலந்து கொள்ளலாம்.

பாதாம் பிசினின் குளிர்ச்சியான தன்மையால், உடல்சூடால் அவதிப்படுபவர்கள் பாதாம் பிசினை பயன்படுத்துபவர். வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும், எனவே தான் அல்சருக்கு சிறந்த மருந்து. வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்து. உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.
இயற்கையில் கிடைக்கும் பிசின் இதில் செயற்கை நிறமோ, மணமோ இல்லாததால் குழந்தைகள் உணவில், அதாவது ஐஸ்கிரீம், ஜெல்லியில் சேர்க்கிறார்கள்.
கோடைகாலங்களில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு சிலருக்கு நீர் சுருக்கு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலையும் உண்டாகிறது. ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி  மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.
தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.