ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும், தகுதியைப் பெற்று விட்டார் இவர்.!

குறி பார்த்து ஒரு எறி எறிஞ்சா,                                                                           நட்சத்திரமும்                                                                                                       நவாப்பழமா விழும்ல..!

ஈட்டி எறிதலில், ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற, ஒருவர் 85 மீட்டர் தூரம் வீச வேண்டும் என்பது இலக்காகும்.

 

தென்ஆப்பிரிக்காவில், நடந்த தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் 24 வயதான ஷிவ்பால் சிங் , தனது 5-வது முயற்சியில், 85.47 மீட்டர் தூரம் வீசி ஒலிம்பிக் போட்டிக்கு முதல்முறையாகத் தகுதி பெற்றார்.

 

ஈட்டி எறிதலில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற 2-வது இந்தியர் ஷிவ்பால் சிங் ஆவார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடந்த போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.