ஹாரிஸ், கராட்சேவ் 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸ், ரஷியாவின் அஸ்லான் கராட்சேவ் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

இதில் ஹாரிஸ் தனது முதல் சுற்றில் 6-3, 3-6, 7-6 (7/5) என்ற செட்களில் போட்டித்தரவரிசையில் 13-ஆவது இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தினார். அஸ்லான் கராட்சேவ் 7-5, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் யூகோ ஹம்பர்ட்டை வென்றார். அஸ்லான் தனது அடுத்த சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஆர்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வார்ட்ஸ்மேனை எதிர்கொள்கிறார்.

இதர சுற்றுகளில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-4, 7-6 (8/6) என்ற செட்களில் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சை தோற்கடித்தார். இங்கிலாந்தின் டேன் இவான்ஸ் 7-6 (8/6), 6-7 (7/9), 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் ஜெரிமி சார்டியை வீழ்த்தினார்.

ஜெர்மனியின் டொமினிக் கோப்ஃபர் 6-4, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை வெற்றி கண்டார். ஸ்பெயினின் தகுதிச்சுற்று வீரர் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா 6-4, 6-0 என்ற செட்களில் பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை வென்றார்.