வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் 3 வது 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் பவல் சதம் அடித்தார்.அவர் 53 பந்துகளில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .மேலும் நிக்கோலஸ் பூரன் சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது .இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் பேன்டன் 73 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது