சிவகார்த்திக்கேயனுடன் நடித்த பிரபல சீரியல் நடிகை..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா. அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறாததால் மீண்டும் தெலுங்கிற்க்கே சென்றுவிட்டார்.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் மற்ற நடிகைகளைப் போல இல்லாமல் ஸ்ரீதிவ்யா பல கஷ்டங்கள்பட்டுள்ளார். இதுவரைக்கும் ஸ்ரீதிவ்யா பல படங்கள் நடித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெரியும் ஆனால் ஸ்ரீதிவ்யா சீரியலிலும் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் thoorpu velle railu serial எனும் சீரியலில் நடித்துள்ளார். சீரியல் நடித்ததன் மூலம் ஸ்ரீதிவ்யா படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்து ஹீரோயினாக வெற்றி பெற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் திறமையின் மூலம் வெற்றி பெற்றுள்ளார் என கூறி வருகின்றனர்.