தோல்வி ஏமாற்றமளிக்கிறது – சிட்சிபாஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை எளிதாக கைப்பற்றிய சிட்சிபாஸ், அடுத்த செட்டையும் எளிதாக கைப்பற்றி ஹியூபட்டை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 மற்றும் 3வது செட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. அவா் எதிர்பாராதவிதமாக காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

தோல்வி குறித்து பேசிய சிட்சிபாஸ், ‘இந்த முறை பட்டம் வெல்ல எனக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக தோற்றது ஏமாற்றமளிக்கிறது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் எல்லாமே என்னுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. திடீரென ஆட்டத்தின் போக்கு எப்படி மாறியது என்று தெரியவில்லை’ என்றார்.