இங்கிலீஷ் பிரீமியர் லீக்

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 2-1 என்ற கோல் கணக்கில் எவர்டன் அணியை வீழ்த்தியது. ஆர்செனல் 2-0 என்ற கோல் கணக்கில் நியூ கேசில் அணியையும், டோட்டன்ஹாம் 4-0 என்ற கணக்கில் ஷெஃபீல்டு யுனைடெட் அணியையும் வென்றன.

சீரி ஏ
இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சம்ப்டோரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ரோமாவை வென்றது. ஜுவென்டஸ் 2-1 என்ற கணக்கில் உடினெஸயும், மிலன் 2-0 என்ற கணக்கில் பெனிவென்டோவையும், லாஸியோ 4-3 என்ற கணக்கில் கினோவாவையும் வென்றன.