இளம் வீரர்களை உருவாக்குவதில் முக்கிய காரணமாக டிராவிட் திகழ்கிறார் – கிரேக் சாப்பல்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் இணையதளத்திற்கு பேட்டியளித்த, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிரேக் சாப்பல் கூறும்போது, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோமோ, அதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் செய்து வருகிறார் என்று அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ,அந்நாட்டில் கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களை அதிகம் உருவாக்குவதில், அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணி , இளம் வீரர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது இதற்கு முக்கிய காரணமாக டிராவிட் திகழ்கிறார், என்று அவர் கூறினார். ஆஸ்திரேலிய அணியில் இளம் வீரர்களை உருவாக்க , என்னென்ன முயற்சிகளை செயல்படுத்தி வந்தோமோ, தற்போது ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியில் செயல்படுத்தி வருகிறார்.

அதோடு நல்ல திறமை வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்குகிறார் என்று அவர் கூறினார். இதற்கு முன்பாக கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களை உருவாக்குவதில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள்தான், முன்னிலையில் இருந்து வந்தன. தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறி , இந்திய அணி இளம் வீரர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .அதே சமயம் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இளம் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி அந்தத் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காக இருந்தனர் என்று சுட்டிக்காட்டினார். எனவே திறமையான இளம் வீரர்களை உருவாக்குவதில் ராகுல் டிராவிட்டின் பங்கு மிக முக்கியமானது என்று சொன்னால் மிகையாகாது என்று கூறினார்.