ஜெஸ்ஸிக்கு இன்று என்ன நாள் தெரியுமா..!!!

தமிழ் திரையுலகில் மெளனமாய் வலம் வந்து ,விண்ணைத்தாண்டி வருவாயா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட த்ரிஷா 1999 ’ஜோடி’ படம் மூலம் அறிமுகமாகினார்.பிறகு 2000ம் ஆண்டு ;மிஸ்’சென்னை ஆகவும்,2001-ல் மிஸ் இந்தியா ’பியூட்டி புல் ஸ்மைல்’ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆண்டின் 3 மாதங்களை சுற்றுப்பயணமாகவே மேற்க்கொள்வார்.நியூயார்க் மற்றும் மியாமி போன்ற இடங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்ல விரும்புவார்.அம்மாவுடனான சுற்றுப்பயணம் இப்பொழுது தனியாகவே செல்ல ஆரம்பித்து விட்டார்.எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டின் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்.தினசரி நீச்சல் அடிப்பதே முக்கிய உடற்பயிற்சியாக வைத்துள்ளார்.சுதந்திரத்தை நேசிக்கும் த்ரிஷா மற்றவரிடமும் அதை எதிர்ப்பார்க்கும் பண்பு கொண்டவாராம்.தன்னிடம் பழகுபவரிடம் வெளிப்படையாக பேசும் த்ரிஷாக்குதான் இன்று பிறந்தநாளாம்