ராஜஸ்தானை சம்பவம் செய்த தோனி – மெர்சலான கவாஸ்கர்

தோனியின் ஹெலிகாப்டன் ஷாட்களும் லெக் சைடில் போட்டு பொளக்கும் ஷாட்களும் வேண்டுமானால் சோடை போகலாம். ஆனால் ஒருபோதும் அவரின் கேப்டன்ஷிப் சோடை போனதே இல்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த கேப்டன் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு தோனியை நோக்கி நீட்டலாம்.

களத்தில் ஒரு கேப்டனாக அவர் வகுக்கும் வியூகங்களும் ஆட்டத்தின் போக்கைக் கணிப்பதிலும் தோனிக்கு நிகர் தோனியே. Presence of mind என்று சொல்வார்கள் அது கேப்டன் கூலான நம்ம தோனிக்கு 200% பொருந்தி போகும். யாருக்கு எப்படி ஃபீல்டிங் செட் செய்ய வேண்டும். ஃபிட்ச்சின் தன்மையைப் பொறுத்து யார் கையில் பந்தைக் கொடுக்கலாம் எல்லாம் தோனிக்கு அத்துப்படி. ஒரு பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக ரெண்டு சிக்ஸ் அடித்தால் வேகமாக பவுலரை நோக்கிச் சென்று தோனி போடும் மந்திரம் அடுத்த பந்தில் பலித்து விடும்.