டெல்லி அணி முதலிடம்..!

பஞ்சாப் அணியை வென்றதன் மூலம், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 8 போட்டிகளில் ஆடி, 6 வெற்றிகளைப் பெற்று, 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது பஞ்சாப்.

7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன், 10 புள்ளிகள் பெற்று, ரன்ரேட் அடிப்படையில், சென்னை அணி இரண்டாமிடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன், 10 புள்ளிகள் பெற்று, ரன்ரேட் அடிப்படையில், பெங்களூரு அணி மூன்றாமிடத்தில் உள்ளது.

7 போட்டிகளில், 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகள் பெற்று, மும்பை அணி நான்காமிடத்தில் உள்ளது. 7 போட்டிகளில், 3 வெற்றிகளுடன், 6 புள்ளிகள் பெற்று, ராஜஸ்தான் அணி ஐந்தாமிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி ஆறாமிடத்திலும், கொல்கத்தா அணி ஏழாவது இடத்திலும், ஐதராபாத் அணி எட்டாவது இடத்திலும் உள்ளன. ஐதராபாத் அணி 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.