காயம் காரணமாக டேவிட் வார்னர் விலகல்!

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் 2-ம் நாள் ஒருநாள் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீதமுள்ள ஒருநாள் ஆட்டத்திலும் டி20 தொடரிலும் இருந்து வார்னர் விலகியுள்ளார். டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பார் என்கிற நம்பிக்கையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதையடுத்து வார்னருக்குப் பதிலாக டார்சி ஷார்ட் ஆஸி. அணிக்குத் தேர்வாகியுள்ளார்.