டென்மார்க் வீரர் ஆக்சல்சென் சாம்பியன்

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், 2ம் நிலை வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), லோ கியான் யேவை (சிங்கப்பூர்) தோற்கடித்து மகுடம் சூடினார். இதன் பெண்கள் பிரிவில் தென்கொரியாவின் அன் செ யங், முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டானோனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து பட்டத்தை தட்டிச் சென்றார்.