ஊரடங்கு கடுமையாக்கப்படும், என வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். 

மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் கூறியதாவது:

கொள்ளிடம் குறுக்கே கீழணைக்குப் பதில் புதிய அணை கட்ட ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன. நாமக்கல் அருகே ராஜவாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள்.அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கிறார்கள்

கொரோனா சிகிச்சைக்கான கட்டணம், மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவு. மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டுதான், சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன’ என கூறினார்.