ஆர்சிபி வீரருக்கு கொரோனா

ஐபிஎல் 2021 சீசன் கிரிக்கெட் திருவிழா நாளைமறுநாள் சென்னையில் தொடங்குகிறது. முதல் நாள் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஐபிஎல் (2020) சீசனை பிசிசிஐ கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பாக நடத்தி முடித்தது. 2021 சீசன் இந்தியாவில் ஆறு மைதானங்களில் நடக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இதனால் போட்டியை நடத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், ஸ்டாஃப்கள், கிரவுண்ட் ஸ்டாஃப்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் டேனியல் சாம்ஸ்-க்கு எடுக்கப்பட்ட 2-வது கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது.
டேனியல் சாம்ஸ் அவருக்கு அறிகுறி ஏதுமில்லை. மருத்துவ வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என ஆர்சிபி அணி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஆர்சிபி அணியின் படிக்கல், டெல்லி அணியின் அக்சார் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.